சிம்பு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ‘மன்மதன்’ திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் ரீ-ரிலீசாகிறது.
சூப்பர் ஹிட் திரைப்படம்
கடந்த 2004-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மன்மதன்’. சிம்பு இரட்டை வேடங்களில் நடித்த இப்படத்தில் ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ‘மன்மதன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின.
ரீ-ரிலீஸ்
தற்போது ‘மன்மதன்’ திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் மீண்டும் ரிலீசாக உள்ளது. நந்தினி தேவி பிலிம்ஸ் நிறுவனம் வரும் மார்ச் 19-ம் தேதி தமிழகம் முழுவதுள்ள 150 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகிறது. ‘மன்மதன்’ திரைப்படம் மீண்டும் ரிலீசாக இருப்பது சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.