பிரபல நடிகை ஜெனிலியா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். தனது வெளிப்படையான மற்றும் துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை அவர் பெரிதும் கவர்ந்துள்ளார். பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்ட பின், படங்களில் நடிப்பதை ஜெனிலியா நிறுத்திவிட்டார். சமீபத்தில் ஸ்கேட்டிங் பயிற்சியின் போது தவறிவிழுந்து இடது கையில் காயம் ஏற்பட்டதாகவும், தற்போது குணமடைந்து வருவதாகவும் சில நாட்களுக்கு முன்னர் ஜெனிலியா தெரிவித்திருந்தார். இந்நிலையில் கையில் கட்டுடன், ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அவர் நடனமாடியிருக்கிறார். கணவர் ரித்தேஷ் மற்றும் நண்பர்களுடன் இணைந்து ஜெனிலியா நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here