விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்துள்ள நிலையில், 5-வது சீசன் எப்போது தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
‘பிக் பாஸ்‘
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது மேலும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த நான்கு சீசன்களை விஜய் டிவி வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர்.
அசத்தல் அப்டேட்
வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், இந்தாண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கம்போல் ஜூன் மாதமே தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.