நடிகர் அஜித் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 30 ஆயிரம் கி.மீ. வரை சைக்கிளிங் செய்துள்ளதாக அவர் உடன் பயணித்த நபர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், நடிப்பை தவிர்த்து பைக் ரேஸிங், துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங் என பல்வேறு திறமைகளை கொண்டவராக திகழ்கிறார். 10 ஆயிரம் கி.மீ. வரை பைக் ட்ரிப் சென்ற அஜித், தற்போது சைக்கிளிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார். ஐதராபாத்தில் நண்பர்களுடன் அவர் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அஜித்துடன் சைக்கிளிங் சென்ற சுரேஷ் குமார் என்பவர் கூறுகையில்; அஜித்துடன் 15 ஆண்டு கால சைக்கிள் பயணங்கள் மறக்கமுடியாதவை என்றார்.