போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை ராகிணி திவேதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்தையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை, கைது
கன்னட திரையுலகில் போதைப் பொருள் பழக்கம் இருப்பதை அடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய விவகாரம், கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சஞ்சனாவுக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. ராகணியின் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது.
திடீர் உடல்நலக்குறைவு
இந்த நிலையில், சிறையில் உள்ள ராகிணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அவர் சிறை வளாகத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற அனுமதிக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளிடம் ராகிணி அனுமதி கேட்ட நிலையில், ஜாமீன் மனு விசாரணையில் உள்ளதை சுட்டிக்காட்டி அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டனர். உச்சநீமன்றத்தில் நடிகை ராகிணியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் போது, மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்படும். அப்போது அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.