சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,248 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் குழப்பம்
உலக சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால், இந்தியாவிலும் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வந்தது. இதனால் நகை பிரியர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். கடந்த 2ம் தேதி சவரன் ரூ.38,072க்கு விற்கப்பட்ட தங்கம், 3ம் தேதி ரூ.38,160க்கு விற்பனையானது. 4ம் தேதி ரூ.38,320யாகவும், 7ம் தேதி சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,072க்கும் விற்கப்பட்டது.
மக்கள் மகிழ்ச்சி
இந்த நிலையில், நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1248 குறைந்து, ரூ.38,128க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.156 குறைந்து, ரூ4,766க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 4 ரூபாய் 10 காசு குறைந்து, 66 ரூபாய் 90 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.