‘யாரடி நீ மோகினி’ சீரியலில் வில்லியாக நடித்து வரும் ஸ்வேதாவுக்கு திருமண நிச்சியதார்த்தம் நடந்ததை அறிந்த ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கன்னட நடிகை
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இவர், கன்னட சினிமாவில் கதாநாயகியகவும், வில்லியாகவும் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறையவே, கன்னடம் மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் பிரியா பவானி சங்கருக்கு பதிலாக அறிமுகமானார். பெங்களூருவில் பிறந்து வளர்ந்த சைத்ரா ரெட்டி, அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட அவர், நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்னர் மாடலிங் துறையில் இருந்தார். ஹீரோயின் கதாப்பாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று இல்லாமல், வில்லி கதாப்பாத்திரத்திலும் நடித்ததால் சைத்ராவுக்கு ரசிகர்கள் குவிந்தனர்.
ரசிகர்கள் வாழ்த்து
சைத்ராவின் ரசிகர்கள் அவரது திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ரசிகர்களின் வாய் முகுர்த்தம் பலித்தது போல், சைத்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராகேஷ் சமலாவை சைத்ரா கைப்பிடிக்கிறார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.