பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றிருக்கும் பாலாஜிக்கும், கேப்ரியலாவுக்கும் இடையே காதல் பற்றிக்கொண்டது போன்ற புரொமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் ரேகா, ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, ஆரி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ஆஜித், சம்யுக்தா, ஷிவானி நாராயணன், கேப்ரியலா, அர்ச்சனா உள்ளிட்ட பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த 3 சீசன்களைப் போல், இந்த சீசனுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

புது காதல்?

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக விஜய் டிவி நிர்வாகம் நாள்தோறும் புரொமோக்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிட்டுள்ள புரொமோ வீடியோவில், கேப்ரியலாவுக்கும் – பாலாவுக்கும் காதல் மலர்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. “யாரோ யாருக்குள் இங்கு யாரோ…” என்ற ரொமான்டிக் பாடலுடன் வெளியாகியுள்ள அந்த புரொமோவில், கேப்ரியலா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வரும் பாலாஜி அவருடன் பேசுகிறார். ‘அவ்வளவு நேரம் நாம் பேசாதது கூட உனக்கு கவலை இல்லைல?’ என கேப்ரியலா அவரிடம் கேட்கிறார். ‘நாம என்ன ஜோசிய காரங்களாப்பா.. மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்ண’ என பாலாஜி பதில் சொல்ல, அதற்கு அவர் ‘நடிக்காதே’ என்று கூறுகிறார். நான் யாரிடமும் நடிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, முகத்துக்கு நேராக சொல்லிவிடுவேன்’ என பாலாஜி கூறுகிறார். இவ்வாறு அவர்கள் இருவருக்குமான பேச்சு செல்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பிக் பாஸ் வீட்டில் புது காதல் மலரத் துவங்கிவிட்டதாக தெரிவித்து வருகின்றனர்.

ஓருவர் மட்டுமே ஆதரவு

முன்னதாக வெளியான இரண்டாவது புரொமோ வீடியோவில், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் கேப்ரியலா இருவரும் எமோஷனலாக இருந்தது காட்டப்பட்டு இருந்தது. டாஸ்க் ஒன்றில் கேப்ரியலாவுக்காக சுரேஷ் சக்ரவர்த்தி மட்டுமே எழுந்து நின்று ஆதரவு கொடுத்திருந்தார். உடல் வலியையும் பொருட்படுத்தாமல் அவர் தனது முதுகில் கேப்ரியலாவை தூக்கி இருந்ததை பார்த்து ரசிகர்களும் பாராட்டி இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here