திரையரங்குகளில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன சூர்யவம்சம், சூரியன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

பல மொழியில் ரீமேக்

1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரியவம்சம். இந்த திரைப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். தேவயானி மற்றும் ராதிகா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆக அமைந்தது. சூரியவம்சம் திரைப்படத்தில் பிரியா ராமன், மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் அடுத்த ஆண்டே தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கிலும் இத்திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பிறகு ஹிந்தி மற்றும் கன்னடம் மொழியிலும் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

சூரியவம்சம் ஹிட்

சரத்குமார், தேவயானி சினிமா கெரியருக்கு இந்த திரைப்படம் முக்கிய பங்காக இருந்தது. அதுவரை ஆக்ஷன் ஹீரோவாக இருந்து வந்த சரத்குமார், இந்த திரைப்படத்துக்குப் பிறகு குடும்பங்களுக்கு பிடித்த கதாநாயகனாகவும் மாறினார். பின்னர் பல குடும்ப பாங்கான கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். வெற்றி படங்களில் இரண்டாம் பாகம் உருவாகி வரும் இந்த சமயத்தில், நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி ஹிட்டான சூரியவம்சம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

இரண்டாம் பாகம்

சூரியவம்சம் இரண்டாம் பாகம் குறித்து சரத்குமார் கூறியதாவது; “சினிமாவில் 40 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். நான் நடிக்கும் படம் எந்த மொழியில் தயாரானாலும், அந்த மொழியில் நானே டப்பிங் பேசுவேன். சுமார் 145 படங்களில் நடித்து விட்டேன். தற்போது 25 படங்களுக்கு மேல் கைவசம் உள்ளன. எனது 150 வது படமாக ஸ்மைல் மேன் தயாராகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதேபோல் 1992 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான சூரியன் திரைப்படமும் இரண்டாம் பாகம் எடுக்கும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here