பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா பெயரில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், இந்த லிங்க்கைத் தொட்டால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்று ஒரு மோசடி பரவி வருகிறது. இந்த மோசடி குறித்து நடிகை ஆல்யா மானசா எச்சரிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது; “உண்மையில் இது ஒரு பொய்யான செய்தி, இது ஒரு மோசடி, இதுல என்னை பயன்படுத்தி இருக்கிறார்கள். நான் இதுபோல தப்பா எதுவுமே பேசவில்லை. அதனால், இதுபோல வரும் எந்த வீடியோவையும் நம்பாதீர்கள், அதில் வரும் லிங்க்கைத் தொடாதீர்கள். பணத்தை செலுத்தி ஏமாறாதீர்கள்” என்று அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here