சின்னத்திரையில் பிரபலமாக இருக்கக்கூடிய நவீன் – கண்மணி ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

காதல் திருமணம்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் நவீன். கலர்ஸ் தமிழ் சேனலின் “இதயத்தை திருடாதே” தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். நவீனும், சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் கண்மணியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இந்த தம்பதி, சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.

குவியும் வாழ்த்துக்கள்

சமீபத்தில் இவர்களின் வளைகாப்பு புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. நவீன் குழந்தையின் கையை பிடித்துக் கொண்டிருப்பது போல் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமல் பகிர்ந்து உள்ளார். மேலும் “எங்களின் குட்டி பட்டு வந்தாச்சு, லைஃப் லைன்” என பதிவிட்டுள்ளார். இவர் பதிவிட்டுள்ள இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here