உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகரும், இயக்குநருமான மனோ பாலா இன்று காலை உயிரிழந்தார். இவரது மரணச் செய்தியை கேட்டு திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மனோ பலாவின் மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் கட்சி பிரபலங்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மனோ பாலாவின் மகன், தனது தந்தை கடந்த சில வாரங்களாகவே உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் என்றும் அவரது உடல்நிலை படிப்படியாக தேறி வந்த நிலையில் திடீரென இறந்துவிட்டது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here