இராவண கோட்டம் படப்பிடிப்பின் போது தற்கொலை எண்ணம் வந்ததாக நடிகர் சாந்தனு கூறியுள்ளார்.

மிகவும் கஷ்டப்பட்டேன்

கண்ணன் ரவி குரூப் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “இராவண கோட்டம்”.  மே 12 உலகமெங்கும் திரைக்கு வெளிவரவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நடிகர் சாந்தனு பேசியது அனைவரையும் கவர்ந்தது. அவர் பேசியதாவது,”சக்கரக்கட்டிக்கு பிறகு மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமாக ராவணக்கோட்டம் இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் நடித்திருப்பதுடன், தயாரிப்பு பணிகளையும் நான் பார்க்க வேண்டியதாகிவிட்டது. தயாரிப்பு என்பது மிகவும் கடினமான விஷயம். மிகவும் கஷ்டப்பட்டேன். இந்த நான்கு ஆண்டுகளில் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். படம் பார்த்த பிறகு மிகவும் திருப்தி அடைந்தேன்”.

தற்கொலை எண்ணம்

கிராமத்து பையனாக நடித்திருக்கிறேன். அது எளிது அல்ல. காலில் ரத்தம் வர நடித்திருக்கிறேன். இது போன்று நான் வேறு எந்த படத்திலும் நடித்தது இல்லை. நான் மட்டும் அல்ல மற்றவர்களும் கஷ்டப்பட்டு நடித்தார்கள். தென்மாவட்டத்தில் உள்ள அரசியலை பற்றி படத்தில் காண்பித்திருக்கிறோம். எங்களின் படப்பிடிப்பு நடந்த இடத்தில் இரு சமூக மக்கள் வணங்கும் மரத்தை வெட்டிவிட்டார்கள். அதனால் ஊர் மக்கள் எங்களிடம் சண்டைக்கு வந்தார்கள்.படப்பிடிப்பு நடந்தபோது பல பிரச்சனைகளை சந்தித்தோம். சொல்ல முடியாத தடைகள் எல்லாம் வந்தது. ஒரு கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் ஓரமாக சென்று கதறி அழுதுவிட்டு வந்திருக்கிறேன். தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைத்தேன். இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு படத்தை எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொருவரும் உயிரை கொடுத்து வேலை செய்கிறோம்.

காலில் ரத்தம்

முள் காட்டில் நடக்க வைத்து கபடி ஆடச் சொன்னார் இயக்குநர். எப்படி சார் முடியும், காலில் ரத்தம் வருகிறது என்றேன். அது எல்லாம் சரியாகிவிடும் நடி என்று கூறினார். பல்வேறு கஷ்டத்தை தாண்டி உருவாகியிருக்கும் ராவணக்கோட்டம் படம் ரிலீஸாவதில் சந்தோஷமாக இருக்கிறது. ராவணக்கோட்டம் படத்தின் 30 ஷூட்டிங்கிற்காக நாங்கள் ஒதுக்கி வைத்த படம் 17 நாட்களிலேயே தீர்ந்துவிட்டது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி என்னை நம்பி தயாரிப்பு மேற்பார்வை பொறுப்பை கொடுத்தார். அதனால் நாளுக்கு நாள் மன அழுத்தம் அதிகாமானது என்று சாந்தனு பேசினார்.”இராவண கோட்டம்” திரைப்படம் மே 12 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here