RRR படத்தில் வில்லனாக நடித்த நடிகர் “ரே ஸ்டீவன்சன்” திடீரென உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 58.

மிரட்டிய வில்லன்

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான RRR படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் வில்லனாக நடித்தவர் ரே ஸ்டீவன்சன். பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வசூலை அள்ளியது. இப்படத்திற்கு இசையமைத்தவர் கீரவாணி. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல் கோல்டன் கிளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை பெற்றது. அது மட்டும் இல்லாமல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் இசையமைப்பாளரான கீரவாணிக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.

திடீர் மறைவு

இப்படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈத்தவர் நடிகர் ரே ஸ்டீவன்சன். இவர் திடீரென உயிரிழுந்துள்ளார். 58 வயதாகும் இவர், இத்தாலியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவரது திடீர் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் RRR படக்குழு தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செய்தியை வெளியிட்டுள்ளது. அணியில் உள்ள நம் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி. RIP ரே ஸ்டீவன்சன். நீங்கள் என்றென்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருப்பீர்கள், “SIR SCOTT” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது இறப்பிற்கு இயக்குநர் ராஜமௌலி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here