அஜித் நடிக்க இருக்கும் 62ஆம் படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. இந்த டைட்டிலை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சொதப்பிய டைட்டில்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நடிகர் அஜித்குமார். இன்று தனது 52 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டமாக அஜித் நடிக்கப் போகும் 62 ஆம் படத்தின் டைட்டில் நள்ளிரவில் வெளியானது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் 62 ஆம் படத்திற்கு “விடாமுயற்சி” என்று டைட்டில் வைத்துள்ளனர். அஜித் ரசிகர்கள் இந்த டைட்டிலை கொண்டாடி வந்தாலும் சமூக வலைதளத்தில் இந்த டைட்டில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது. மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித்தின் படத்தின் டைட்டில்கள் சொதப்பலாக இருப்பதாக கருத்துக்களும் பகிரப்பட்டு வருகின்றது.

மொக்க டைட்டில்

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம், விசுவாசம், வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களின் டைட்டில்கள் ராசி பலன்கள் போல இருப்பதாக கூறிவந்த நிலையில், தற்போது இந்த லிஸ்டில் ‘விடாமுயற்சி’ என்ற டைட்டிலும் சேர்ந்துள்ளது. டைட்டில் மிக மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிப்பதுடன் மாஸ் ஹீரோக்களின் டைட்டில்கள் பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்று கமெண்ட் தெரிவிக்கின்றனர். படம் நன்றாக இருந்தாலும் டைட்டில் பவர்ஃபுல்லாக இருந்தால் தான் ரசிகர்கள் படத்தை ஆர்வத்துடன் பார்ப்பார்கள் என்று கருத்துக்கள் பகிரப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here