தமிழகத்தில் வெயில் மேலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதிலிருந்து வெயிலின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்தே காணப்படுகிறது. நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவானதால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். இந்த நிலையில், தமிழகத்தில் வெயில் மேலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இன்றும், நாளையும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வெளியே வராதீங்க

இதனிடையே, கோடை வெயில் காலத்தில் செய்ய வேண்டியவை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது; “மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கவும். தாகமாக இல்லாவிட்டாலும் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது கடினமான செயல்களை தவிர்க்கவும். அவசர பயணமாக இருந்தால், கட்டாயம் தண்ணீரை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். வெயிலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ விட வேண்டாம். மயக்கம் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் மருத்துவரை அணுகவும். குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், மோர் போன்றவற்றை பயன்படுத்துங்கள்” போன்றவைகள் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here