பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் பஹீரா திரைப்படத்தின் குச் குச் ஹோத்தா ஹே பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பன்முக திறமையாளர்

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் படம் “பஹீரா”. இப்படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். பல்வேறூ காரணங்களுக்காக இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை மாற்றப்பட்டுள்ளது. பிரபுதேவா நடிப்புக்கென்று பல ரசிகர்கள் உள்ளனர். அதனால் இந்த படத்தின் ரிலீஸுக்காக காத்துகொண்டு இருக்கின்றனர்.

விரைவில் ரிலீஸ்

பிரபுதேவா நடிப்பில் மிரட்டலான சைக்கோ திரில்லர் திரைப்படமாக தயாராகி நீண்ட நாட்களாக ரிலீசாக காத்திருக்கும் பஹீரா திரைப்படம், வருகிற மார்ச் 3ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வகுமார் SK மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ள பஹீரா திரைப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்ய, கணேசன்.S இசையமைத்துள்ளார். இந்நிலையில் பஹீரா திரைப்படத்தின் குச் குச் ஹோத்தா ஹே என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here