அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘புஷ்பா’ ரஷ்யாவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

‘புஷ்பா’

அல்லு அர்ஜுன் நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்த திரைப்படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘புஷ்பா’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக ராஷ்மிகா மந்தனாவின் ‘நா சாமி’, சமந்தாவின் ‘ஒ சொல்றியா மாமா’ பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவான புஷ்பா திரைப்படம், எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் முதல் நாளிலேயே சுமார் ரூ.40 கோடி வசூல் சாதனை செய்ததாக கூறப்பட்டது.

வசூல் சாதனை

‘புஷ்பா’ திரைப்படம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரஷ்யாவில் வெளியிடப்பட்டது. இப்படம் இதுவரை ரூ.1.02 கோடி வசூலித்துள்ளது. மேலும் 774 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட இப்படம், இதுவரை எந்த தியேட்டரில் இருந்தும் வெளியேறவில்லை. ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெரப் நடிப்பில் இந்தியில் வெளியான ‘வார்’ திரைப்படம் ரஷ்யாவில் ரூ.1.07 கோடி வசூலித்தது. ஒரு சில நாட்களில் இந்த வசூலை ‘புஷ்பா’ திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here