சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஏற்றம் – இறக்கம்

தங்கம் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வந்தாலும், தங்கத்தின் மீதான மோகம் மட்டும் மக்களுக்கு குறையவில்லை. தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தினசரி சந்தை நிலவரத்தை பொருத்து காலை, மாலை என்று இரு முறை நிர்ணயிக்கப்படுகிறது. முக்கிய பண்டிகை நாட்கள், திருமணங்கள் அதிகம் நடைபெறும் சுபமுகூர்த்த மாதங்கள் மற்றும் நாட்கள் போன்ற சந்தர்ப்பங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். அதிக விற்பனை நடக்காத நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து காணப்படும்.

கலக்கம்

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று காலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.40,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.29 உயர்ந்து ரூ.5,045-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராம் ஒன்றிற்கு 90 காசுகள் அதிகரித்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.40 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்துள்ளது, நடுத்தரக் குடும்பத்து மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து ஏற்றத்துடன் நகர்வது, சர்வதேச சந்தை சூழல் சாதகமாக இருப்பதால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

blob:https://www.dinakaran.com/86612f50-8a2e-4a20-8fae-fcb6c4e5521f

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here