சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘லவ் டுடே’ படத்தில் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘லவ் டுடே’

கோமாளி திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘லவ் டுடே’. பிரதீப் இயக்கி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். மேலும் ராதிகா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். கடந்த 4-ம் தேதி வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் ஆதரவு பெற்று வெற்றி அடைந்தது.

OTT ரிலீஸ்

இப்படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி ‘லவ் டுடே’ திரைப்படம் உலக அளவில் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘லவ் டுடே’ திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி Netflix OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here