துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை ரித்திகா சிங் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சிறந்த நடிப்பு 

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் “இறுதிச்சுற்று”. இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இறுதிச்சுற்று படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரித்திகா சிங், ஏராளமான விருதுகளை வென்றார். இதனைதொடர்ந்து ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா படத்தில் நடித்தார். பின்னர் இந்தி, தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

ஒரு பாடலுக்கு நடனம்

ஒரு சில தமிழ் படங்களில் நடத்தாலும், ரித்திகா சிங்கால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. இந்நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் ’கிங் ஆப் கோதா’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் இந்த பாடல் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here