தமிழகம் வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், அன்பும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்ததாகவும் நடிகை சன்னி லியோன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

காமெடி பேய்

ஆர்.யுவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ஓ மை கோஸ்ட்”. கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், நடிகர் சதீஷ், நடிகைகள் தர்ஷா குப்தா, சஞ்சனா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். “ஓ மை கோஸ்ட்” திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் நடிகை சன்னி லியோன் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

கவர்ச்சி நடிகை

இதில் கலந்துக் கொண்ட நடிகை சன்னி லியோன் பேசியதாவது; தமிழகம் வந்து உங்களை சந்திதது மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், அன்பும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ”ஓ மை கோஸ்ட்” திரைப்படத்திற்காக அனைவரும் கடின உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்துள்ளோம். இந்த படத்தை பார்க்க உங்களது நேரத்தையும் பணத்தையும் நீங்கள் ஒதுக்குவதற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எங்களது கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை என்றார். இவ்வாறு நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here