பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் RRR திரைப்படத்தின் டிரெய்லர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரம்மாண்டம்

‘பாகுபலி’ எனும் பிரம்மாண்ட வெற்றிப் படத்தை கொடுத்தவர் பிரபல இயக்குநர் ராஜமவுலி. ‘பாகுபலி’ வெற்றியைத் தொடர்ந்து தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வைரல்

டிவிவி தனய்யா தயாரிக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி உள்ளது. படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ம் தேதி RRR திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற RRR டிரெய்லர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here