மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ப்ரதி பூவன்கோழி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றித் திரைப்படம்

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் மஞ்சு வாரியர், ரோஷன் ஆண்ட்ரூஸ், அனுஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் ‘ப்ரதி பூவன்கோழி’. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இப்படம், நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. பேருந்துப் பயணத்தில் தன்னைத் தொட்ட ஒருவனை பெண் எப்படி பழிவாங்கினார் என்பது தான் ‘ப்ரதி பூவன்கோழி’ படத்தின் கதையாகும்.

ரீமேக்கில் நயன்தாரா?

இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்றியுள்ள நிலையில், தமிழில் ரீமேக் உரிமையை யார் கைப்பற்றியுள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. தமிழ் ரீமேக்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here