புதிய தோற்றத்தில் காட்சியளிக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலக நாயகன்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் நடந்து வந்த நிலையில், கிரேன் சரிந்து விழுந்த விபத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு லாக்டவுன் பிரச்சனையால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதற்கிடையே இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அது முற்றிலும் தவறான தகவல் என படக்குழுவிடமிருந்து செய்தி வந்தது. இதனையடுத்து தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை ‘தலைவன் இருக்கிறான்’ என்ற பெயரில் உருவாக்கும் கமல், அப்பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்றும், அப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

மாஸ் புகைப்படங்கள்

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மிகவும் ஸ்டைலான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது படத்திற்கான கெட்டப்பா? அல்லது பிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் தாடியுடன், மாசான லுக்கில் இருக்கும் உலக நாயகனை பார்த்த இணையதள வாசிகள், ஆண்டவரே பிக்பாஸ் நிகழ்ச்சி எப்ப ஸ்டார்ட் பண்ணுறீங்க, சீக்கிரம் அதற்கான அறிவிப்பை கொடுங்க என்றும் சீக்கிரம் அதற்கான வேலையை தொடங்குங்கள் என்றும் கூறி வருகின்றனர். இந்த வயசுலயும் சும்மா தாறுமாறா இருக்கீங்க என்று கமல் ரசிகர்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள இந்தப் புகைப்படங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரோமோ ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வந்த கமல்ஹாசனின் போட்டோஸ் என்று பலரும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here