பாலிவுட் திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை தீபிகா படுகோன் பாகுபலி ஹீரோ பிரபாஸ்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரீபல் ஸ்டார் பிரபாஸ்

‘ஈஸ்வர்’ என்ற தெலுங்கு படம் முலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரபாஸ். தனது சினிமா வாழ்க்கை ஆரம்பித்து சில படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே, பிரம்மாண்ட இயக்குநர் ராஜாமவுலியுடன் கைகோர்த்தார். பல மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற பில்லா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்திருந்தார். அப்படம் அஜித்க்கு ஒரு கிளாஸ் படமாக அமைந்தது. அதனை அறிந்த பிரபாஸ், தெலுங்கில் பில்லா படத்தை ரீமேக் செய்து நடித்தார். இப்படத்தில் இருந்து படு ஸ்டைலாக மாறினார் பிரபாஸ். தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர், பாகுபலி படத்தின் மூலம் தமிழிற்கு அறிமுகமானார். இப்படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்ததுடன், பிரபாஸூக்கு ஒரு நல்ல மார்கெட்டையும் ஏற்படுத்தி கொடுத்தது.

பாகுபலி ஹீரோவுடன் தீபிகா

பிரபாஸ் கடைசியாக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரான ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை ஷர்தா கப்பூர் நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் ரீலிஸ் ஆகி, வசூலை அள்ளிக் குவித்தது. ஆனால் கலவையான விமர்சனம் கிடைத்தது. தற்போது பிரபாஸின் அடுத்த படத்தின் அப்டேட் வந்துள்ளது. கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருதுபெற்றுத் தந்த ‘மகாநடி’ திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின், பிரபாஸின் புதிய படத்தை இயக்குகிறார். இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளார். பாலிவுட் பக்கம் அதிக படங்களில் நடித்து வந்த தீபிகா, அவ்வளவு எளிதில் படங்களை ஒப்புக்கொள்வது இல்லை. ஆனால் இப்படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், கண்டிப்பாக அனைவரும் அவரது கதாபாத்திரத்தை ரசிப்பார்கள் என்பதை அறிந்தும் இதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் தீபிகா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here