தமிழில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வரும் நடிகர் ஹரீஷ் உத்தமன் 2-வது திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்து

தமிழில் ‘தா’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரீஷ் உத்தமன். பாண்டியநாடு, மீகாமன், யாகாவாராயினும் நா காக்க, தனி ஒருவன், பாயும் புலி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வரும் ஹரீஷ் உத்தமன், மும்பையைச் சேர்ந்த மேக்கப் கலைஞர் அம்ரிதா கல்யான்பூரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தில் அவர்கள் விவாகரத்துப் பெற்றனர்.

திருமணம்

பின்னர், மலையாள நடிகையான சின்னு குருவில்லாவை ஹரீஷ் உத்தமன் காதலித்து வந்தார். மலையாளத்தில் நார்த் 24 காதம், கசபா, லுக்கா சுப்பி உட்பட படங்களில் சின்னு நடித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் கேரளாவில் உள்ள மாவேலிகராவில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here