சினிமா வாய்ப்புத் தேடும் பெண்கள் மோசடி நபர்களிடம் சிக்கி ஏமாற வேண்டாம் என்று நடிகை பூர்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறந்த நடிகை

கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை பூர்ணா, மலையாள சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார். இவர் தமிழில் கடைசியாக ராம் இயக்கிய ‘சவரக்கத்தி’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஒரு சில படங்களில் வில்லியாகவும் நடித்துள்ளார். பூர்ணாவை திருமணம் செய்துகொள்ளக் கோரி அவரது பெற்றோர்கள் பலமுறை வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் நடிப்பு ஒரு தடையாக இருக்கும் விஷயத்தால் தனது திருமணம் தாமதமாவதாக பூர்ணா கூறியிருந்தார்.

டிக் டாக் மாப்பிள்ளை

சில தினங்களுக்கு முன்பு அன்வர் அலி என்ற பெயர் கொண்ட ஒருவர், பூர்ணாவுக்கு டிக் டாக் மூலம் அறிமுகமாகியுள்ளார். தான் கோழிக்கோட்டைச் சேர்ந்த மிகப்பெரிய நகைக்கடையின் முதலாளி என்றும் தற்போது துபாயில் வசித்து வருவதாகவும் அவர் பூர்ணாவிடம் கூறியுள்ளார். அதன்பிறகு சிலமுறை அவர்கள் செல்போனில் உரையாடியதாகத் தெரிகிறது. சில நாட்களுக்குப் பிறகு அன்வரின் குடும்ப உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் பூர்ணாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் பூர்ணாவின் பெற்றோரிடமும் அன்வரின் புகைப்படம் என்று டிக் டாக் பிரபலம் ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி அவருக்குப் பூர்ணாவைத் திருமணம் செய்துவைக்குமாறு கேட்டுள்ளனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பூர்ணாவின் குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அனைவரும் திருமண மோசடிக் கும்பல் என்பது தெரிந்தது. இதனைக் கேட்ட நடிகை பூர்ணா அதிர்ந்து போனார்.

எச்சரிக்கையுடன் இருங்கள்

இதுகுறித்து சமீபத்தில் பூர்ணா அளித்த பேட்டியில், தங்கள் உறவினர்களின் நண்பர்கள் மூலம் தனது பெயர் அன்வர் என்று சொல்லி எங்கள் குடும்பத்தினருடன் அந்த நபர் அறிமுகமானார் எனக் கூறியுள்ளார். தனது பெற்றோர்கள், அன்வர் பெற்றோரின் சகோதரி, சகோதரி மகள் எல்லோரிடமும் பேசிய நிலையில், அவர்கள் எங்கள் வீட்டுக்கும் வந்தனர். ஆனால், அவர்களை நேரில் பார்த்ததும் சந்தேகம் வந்ததையடுத்து, அவர்கள் பற்றிய விவரங்களை துருவித்துருவி கேட்டதும், பதில் சொல்லாமல் வீட்டில் இருந்து அனைவரும் வெளியேறிவிட்டதாக தெரிவித்தார். அதன்பிறகுதான் போனில் பணம் கேட்டு மிரட்டியதாகவும், என்னைபோல் வேறு யாரும் பாதிக்கக்கூடாது என்பதற்காகதான் புகார் அளித்தேன் எனவும் பூர்ணா கூறியுள்ளார். சினிமா அழகியலான உலகம் எனத் தெரிவித்துள்ள அவர், பட வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று பலர் வருவார்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தெரிவித்துள்ளார். பல இளம் பெண்கள் கொச்சியில் அறை எடுத்து தங்கி நடிகையாகும் கனவோடு சினிமா வாய்ப்பு தேடுவதாகவும், யார் வாய்ப்பு வாங்கி தருவதாக அணுகினாலும் அவர்களை பற்றி தோழிகள் மூலம் நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டு முடிவு எடுங்கள் என்றும் நடிகை பூர்ணா அறிவுரை வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here